இந்தியாவில் வங்கி கணக்குகளை விட பெரும்பாலான மக்கள் தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் இணைய அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய அரசாங்கம் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான விதிமுறைகளை மாற்றம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி மகிலா சம்மான் சேமிப்பு திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகின்றது. இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 7.5 சதவீதம் வருடாந்திர வட்டி வழங்கப்படுகிறது.

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் ஒற்றைக் கணக்கு பயன்படுத்துபவர்களுக்கு வரம்பு 4 லட்சம் ரூபாயில் இருந்து 9 லட்சம் ரூபாய் வரையும், கூட்டு கணக்கு வைத்திருப்பவர்களுக்கான வரம்பு 9 லட்சம் ரூபாயிலிருந்து 15 லட்சம் ரூபாய் வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதனைப் போலவே மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான அதிகபட்ச வரம்பு 15 லட்சம் ரூபாய் இருந்து 30 லட்சம் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தபால் அலுவலக திட்டங்களில் முதலீடு செய்து விட்டு திட்ட முடிவதற்கு முன்பு தொகையை திரும்ப பெற விரும்பினால் தபால் அலுவலக சேமிப்பு கணக்கு விகிதத்தில் நான்கு சதவீதம் வட்டி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.