இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது. இந்நிலையில் தபால்துறை வங்கி பெயரில் பண பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது INDIA POST PAYMENT என்ற பெயரில் வங்கி சேவை இயங்கி வருகிறது. இந்த வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்து, மோசடி கும்பல் வங்கி கணக்கு முடங்கியதாக லிங்க் உடன் மெசேஜ் அனுப்புகிறது. அந்த லிங்கை கிளிக் செய்தால் கார்டு எண், OTP கேட்க, அதை கொடுத்தால் கணக்கில் இருந்து பணம் பறிபோவதாகவும் எச்சரித்துள்ளனர்