கைலாசா எங்கே இருக்கிறது என இதுவரை அறிவிக்காமல் இருந்த நித்தியானந்தா கைலாசா இருக்கும் இடத்தை அறிவிக்க போவதாக கூறி இருக்கிறார். குரு பூர்ணிமா அன்று கைலாசா இருக்கும் இடத்தை அறிவிக்க போவதாக அவர் அறிவித்திருந்தார். அதனால் கைலாசா எங்கே இருக்கிறது என்பதை அறிய அனைவரும் ஆர்வம் காட்டினர். இந்த நிலையில் குருகுலம், இந்து பல்கலைக்கழகம் மற்றும் தொழில் செய்வதற்கான இந்து உலக வர்த்தக மையம் கைலாசாவில் அமைய உள்ளதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார்.

இது குறித்து youtube வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், கைலாசாவில் உணவு, தங்குமிடம், உடை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் இலவசம் என்று அறிவித்துள்ளார். மேலும் ராணுவமும் அல்லது காவல்துறையோ கைலாசத்தில் இல்லை என்றும் வரிவிதிப்பு முறையில் இல்லை என்றும் கூறியுள்ளார். ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, கரீபியன் தீவு, பசிபிக், தென் அமெரிக்கா ஆகிய ஏழு இடங்களில் கைலாசாவுக்கு சொந்தமான இறையாண்மை பிரதேசங்களும், சுயாட்சி பிரதேசங்களும் உண்டு எனக் கூறியுள்ள நித்யானந்தா, இனி வரும் காலத்தில் வேறு சில இடங்களையும் அறிவிப்பதாகவும் கூறியுள்ளார்.