கிரீஸ் நாட்டின் ரோட்ஸ் தீவு அருகே அகதிகள் பயணம் செய்த படகு கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ரோந்து படகை பார்த்து பயந்து தப்பிக்க முயற்சித்த போது தான் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது குறித்த தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு 18 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர். ஆனால் 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் மேலும் சிலர் காணாமல் போய்விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.