திரைப்படங்களின் வெற்றி குறித்த தனது பதிவுகள் யார் மனதைப் புண்படுத்தி இருந்தாலும் மன்னிக்க வேண்டுகிறேன் என்று நடிகர் பார்த்திபன் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் தனது X பதிவில், “நண்பர்களே! ஒரு கேள்விக்கு நான் அளிக்கும் பதிலை, பாதியாய் வெளியிடும் போது பாதிப்பு எனக்காகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இப்போதெல்லாம் ஒரு படம் ஹிட்டாக வேண்டும் என்றால் கதை சரியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தமன்னாவை ஆட வைத்தால் போதும். கதை சரியாக இல்லை என்றாலும் கூட படம் ஹிட் ஆகிவிடும் என்று கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.,