தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் பதவியிலிருந்து யுவராஜா ராஜினாமா செய்துள்ளதாக காலை அறிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பளிக்கும் விதமாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன்.

இக்கட்சியின் வளர்ச்சிக்காக ஜி கே வாசன் தலைமையில் தொடர்ந்து பயணிப்பேன் என்று தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலின் போது யுவராஜா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.