தமிழகத்தில் இருக்கும் 38 வருவாய் மாவட்டங்களை 43 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பெரிய மாவட்டங்களான கடலூர், திருவண்ணாமலை, கோவை, தஞ்சை மற்றும் சேலம் ஆகியவை பிரிக்கப்பட உள்ளன. முறையே விருதாச்சலம், செய்யாறு, பொள்ளாச்சி, கும்பகோணம் மற்றும் ஆத்தூர் ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.