
தூத்துக்குடி அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்த ஒரே ஒரு முதியவரும் உயிரிழந்தார். தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பொய்த்துப் போனதன் காரணமாக இந்த ஊர் மக்கள் வெளியேறி விட்டனர். மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் கந்தசாமி (75) மட்டும் கிராமத்தை விட்டு வெளியேறாமல் அங்கேயே தங்கியிருந்தார். தற்போது அந்த கிராமத்தின் கடைசி நம்பிக்கையும் மூச்சை நிறுத்திக் கொண்டது.