சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சார் என்ற ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் காவல்துறை ஞானசேகரன் என்ற ஒருவர் மட்டும்தான் குற்றவாளி எனவும் வேறொருவருக்கு தொடர்பு கிடையாது எனவும் கூறியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைதியாக இருப்பது ஏன் என்று தற்போது அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது, தமிழகம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பம். ஏற்கனவே பாதிப்படைந்த அந்த மாணவி மனம் உடைந்து போன நிலையில் இருக்கும் நிலையில் எஃப் ஐ ஆர் ஐ கசிய விட்டு திமுக அரசு செய்யக்கூடாத அனைத்து விஷயங்களையும் செய்துள்ளது. ஏற்கனவே பல குற்ற செயல்களில் சிக்கிய ஞானசேகரை ஏன் கண்காணிக்காமல் இருந்தனர். அவர் திமுக கட்சியை சேர்ந்தவர் என்பதாலும் அமைச்சர்களுடன் தொடர்பில் இருந்தார் என்பதாலும் தான் போலீசார் அவரை கண்டுகொள்ளவில்லை.

அதோடு திமுக பாதிக்கப்பட்ட மாணவிதான் தவறு செய்துள்ளார் என்று வழக்கையே மாற்ற முயற்சிக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறிய நிலையில் எஃப் ஐ ஆர் வெளியானதால் ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும். 2026 தேர்தலில் துணை முதல்வராக இருக்கும் உதயநிதி முதல்வர் பதவி பெற வேண்டும் என்ற இமேஜை காப்பதில் திமுக தீவிரமாக இருக்கும் நிலையில் இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அமைதி காப்பது ஏன்.?

இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் பற்றி பேசும் ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் தமிழகத்திற்கு வந்து பெண்ணின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறாதது ஏன்.? மேலும் இந்த விவகாரத்தில் நீதிக்காக போராடுபவர்களை அடக்கி ஒடுக்குவதில் தீவிரமாக திமுக செயல்படுவதோடு பாஜக மகளிர் அணி நிர்வாகிகளை ஆட்டுக்கோட்டை கையில் அடைத்து அவர்களுடைய குரூர முகத்தை காட்டியுள்ளனர் என்று கூறியுள்ளார்.