
தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக கூறியுள்ளார். தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீரை திறந்து விட்டுள்ளதாக கர்நாடக பாஜக குற்றம் சாட்டியது. இது குறித்து பேசிய அவர், எங்கள் பயன்பாட்டுக்கு தண்ணீர் இல்லாத போது தமிழகத்திற்கு எப்படி திறந்து விடுவோம், பாஜக கூறுவது அனைத்தும் பொய். தமிழகம் கேட்டாலும் மத்திய அரசே கூறினாலும் தண்ணீர் திறக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.