தமிழ்நாட்டிற்கு தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு மற்றும் மஞ்சள் என ஒரே நேரத்தில் இரண்டு எச்சரிக்கைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கரூர், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், திருச்சி, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.