
தமிழகத்தில் அடுத்த வாரம் 100% லேப் டெக்னீசியன் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உதமிழக அரசு பன்னோக்கு மருத்துவமனையில் 1622 அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களுக்கு தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியத்தின் (NABL) சான்றிதழ்களைநிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன், தமிழகத்தில் 2286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது. இதில் சென்னை நீங்கலாக மற்ற ஊர்களில் 2127 ஆரம்ப சுகாதார நிலையங்களின் அடிப்படையில் பரிசோதனை கூடங்கள் உள்ளது.
டெங்கு, மலேரியா உள்ளிட்ட 29 வகையான பரிசோதனைகள் இதில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .பரிசோதனைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அடுத்த வாரத்தோடு தமிழகத்தில் 100 சதவீதம் லேப் டெக்னீசியன் பணியிடங்கள் நிரப்பப்படும். அதன் பிறகு கலந்தாய்வு நடைபெற்று பணி ஆணைகள் வழங்கப்படும். புதிய பணியிடங்களுக்கு 1021 மருத்துவ பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப பணி ஆணைகள் வழங்கினோம் என்று தெரிவித்துள்ளார்.