
தேனி மாவட்டத்தில் திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதாவது சபரிமலை கோவிலுக்கு அந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்த நிலையில் எதிரே வந்த ஒரு வேன் திடீரென அந்த பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் வேன் ஓட்டுனர், 10 வயது சிறுவன் உட்பட மூவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்த நிலையில் அவர்கள் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.