சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ் குமார். இவர் மீது பெண் காவலர் ஒருவர் டிஜிபி சங்கர் ஜீவாலிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து மகேஷ் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.  அவர் மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதாவது டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாரணை நடத்துவதற்காக விசாகா கமிட்டி அமைக்கப்பட்டநிலையில் இவர்கள் கொடுத்த அறிக்கையின் படி தான் தற்போது அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வரும் நிலையில் தற்போது போலீஸ்காரர் ஒருவரே பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.