தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த ஜூன் 10ஆம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இந்த கல்வி ஆண்டில் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மனசு புகார் பெட்டியை அமைக்க வேண்டும் என மாநில மகளிர் ஆணையத் தலைவி ஏ.எஸ் குமாரி உத்தரவிட்டுள்ளார். இந்தப் பெட்டிக்கு வரும் கடிதங்களை பள்ளி மேலாண்மை குழு பெற்றோர்கள் முன்னிலையில் தான் திறக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். புகார்களை 15 நாட்களுக்கு ஒரு முறை பிரித்துப் பார்த்து உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்ற நடைமுறை ஏற்கனவே பல பள்ளிகளில் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.