தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் அனைவரும் உயர் கல்வியை தொடர அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று மேற்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மூன்று வருடத்திற்கு உயர்கல்வியை முடிக்கும் வரை ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதற்கான தொகையை ஆண்டு தோறும் மாணவிகள் பெற்று வரும் நிலையில் உயர்கல்வியை தொடரும் அரசு பள்ளி மாணவிகள் எத்தனை பேர் இந்த உதவித்தொகை மூலமாக பயனடைந்து வருகிறார்கள் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவிகள் பத்தாம் வகுப்புக்கு மேல் படிப்பதில்லை என்றும் 50 சதவீதம் மாணவிகள் மட்டுமே இந்த உதவி தொகையை பெற்று வருவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. திருமணம் உள்ளிட்ட ஒரு சில விஷயங்களால் மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படுவதாகவும் அனைத்து மாணவிகளும் உயர் கல்வி பெற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.