
தமிழகத்தில் அரசு பேருந்துகளில் முன்பதிவு சேவையை அரசு விரிவு படுத்தி உள்ளது. பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களை தாண்டி தமிழக அரசு ஒவ்வொரு பகுதிக்கும் நூற்றுக்கணக்கான பேருந்துகளை இயக்கி வருகின்றது. அவற்றை முன் பதிவு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. இந்நிலையில் முன்பதிவு சேவையை தற்போது தமிழக அரசு விரிவாக்கம் செய்துள்ளது.பயணிகளின் பாதுகாப்பிற்கும் மற்றும் வசதியான பயணத்திற்காகவும் ஒரு மாதத்திற்கு முன்பு இருக்கைகளை இணையதளம் மற்றும் கைபேசி மூலம் முன்பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதியை அரசு பேருந்துகளில் 200 கிலோமீட்டர் தூரத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக விரிவு படுத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் சேலம் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு சேவை விரிவு படுத்தப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அரசு பேருந்துகள் முன்பதிவு தளமான tnstc.in மற்றும் tnstc mobile app மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். இந்த வசதி தமிழகத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.