
தமிழகத்தில் நேற்று முதல் 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ரூ. 5 முதல் 150 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வின் காரணமாக அத்தியாவசிய பொருள்களின் விலைகளும் உயரும் அபாயம் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் இன்று ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக செய்தி ஒன்று வெளியானது. இதற்கு தற்போது ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் உயர்த்தப்படாது. மேலும் சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை தாங்கள் வலியுறுத்தி வருவதாக தான் கூறியுள்ளார்.