புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நாளை (ஏப்ரல் 07) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடுகெட்ட வருகின்ற 19ம் தேதி (சனிக் கிழமை) வேலை நாள் என்றும் சனிக் கிழமையை வேலை நாளாகக் கொண்ட அலுவலகங்களுக்கு 20ம் தேதியான ஞாயிற்றுக் கிழமை வேலை நாள் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.