தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கடையேழு வள்ளல்களில் ஒருவரும் மற்றும் வில்வித்தைகளில் சிறந்து விளங்கிய வல்வில் ஓரி மன்னனின் சிறப்பை போற்றி ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் தமிழக அரசு சார்பாக மாபெரும் விழா நடத்தப்பட்டு வருகின்றது. இந்த வருடம் ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் வல்வில்ஓரி திருவிழா நடைபெற இருப்பதால் நாமக்கல் மாவட்டத்தில் இந்த திருவிழாவை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.