தேனி மாவட்டம் பூதிபுரம் மாநில நெடுஞ்சாலையில் இருக்கும் இரண்டு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றமானது இரண்டு டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட சென்னை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா, தேனி மாவட்ட டாஸ்மாக் மேலாளர், தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் இந்த விவகாரம் குறித்து விரிவாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடைகள் செயல்படக்கூடாது என்ற உத்தரவை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.