தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய நான்கு கடலோர மாவட்டங்களுக்கு நாளை இரவு 11:30 மணி வரை கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு மாவட்ட கடற்கரைகளில் அலை அதிக உயரம் எழும்பும் என்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடல் லேசான சீற்றதோடு காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இதேபோன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் லேசான கடல் சீற்றம் இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.