
தமிழகத்தின் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் அடிக்கடி tnpsc தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றது. அதேசமயம் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் போது சிலருக்கு முன்னுரிமை வழங்க உள்ளதாக தமிழக அரசு அடிக்கடி அறிவித்து வருகின்றது. அதாவது குடும்பத்தின் முதல் பட்டதாரிகளுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் 1 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் மொழியில் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கொரோனா காலத்தில் போது தன்னுடைய இரண்டு பெற்றோர்களையும் இழந்த இளைஞர்களுக்கும் அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேல் அரசு பணிக்கு தேர்வுகள் நடத்தப்பட உள்ள நிலையில் மத்திய அரசு பணிகளை போல தமிழக அரசு பணிகளிலும் தமிழ் மொழியில் பள்ளி படிப்பை முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.