தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக மக்கள் பயனடையும் வகையில் தினம்தோறும் புதுவிதமான அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. திருவாரூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் சக்கரபாணி என்று ஆய்வு செய்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 19% ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையிலும் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல் கொள்முதல் செய்யவும் நெல் வரத்து அதிகம் உள்ள கொள்முதல் நிலையம் அருகில் மற்றொரு கொள்முதல் நிலையம் திறக்கவும் அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.