
தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என பள்ளி கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்குவதால் பத்தாம் வகுப்பில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைகிறது. இதனால் ஒன்பதாம் வகுப்பில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒன்பதாம் வகுப்பில் ஒரு மாணவரை தேர்ச்சி அடைய செய்வதற்கு அவர் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சமாக 25 மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்.
உடற்கல்வி பாடத்தையும் சேர்த்து குறைந்தது 150 மதிப்பெண் இருக்க வேண்டும். கட்டாயமாக அந்த மாணவருக்கு 75 சதவீதத்திற்கும் அதிகமான வருகை பதிவு இருக்க வேண்டும். ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் மாணவர் இறுதி தேர்வில் ஒரு பாடத்தில் அல்லது அனைத்து தேர்விற்கும் வரவில்லை என்றால் அந்த மாணவர் அதற்கான மருத்துவச் சான்றிதழ் ஒப்படைக்க வேண்டும். அப்படி செய்தால் காலாண்டு அல்லது அரையாண்டு மதிப்பெண்ணை எடுத்துக் கொள்ளலாம். இந்த விதிகளுக்கு ஒரு மாணவன் உட்படவில்லை என்றால் அந்த மாணவரை தேர்ச்சி பெற செய்ய முதன்மை கல்வி அலுவலரின் சிறப்பு அனுமதி பெற்றிருக்க வேண்டுமென்று அரசு அறிவித்துள்ளது.