
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக சென்னையில் கன மழை பெய்து வரும் நிலையில் கடந்த ஆண்டுகளில் சென்னையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மக்களுக்கு கடுமையான சிரமத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்த வருடம் அப்படி நடக்காமல் இருக்க முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை மாநகரில் வடகிழக்கு பருவமழை முடியும் வரை மெட்ரோ பணிகளுக்கு சாலையில் பள்ளம் தோன்றும் பணிகளை நிறுத்த வேண்டும் எனவும் மின்வாரிய பணிகளுக்காகவும் சாலையில் பள்ளம் தோண்ட கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மழை நீர் கால்வாய் அமைப்புகள் முறையாக தூர்வாரப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சென்னையில் பழுதான சாலைகளை சரி செய்யும் பணிகளை 100% நிறைவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.