
தமிழகத்தில் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தின் கீழ் 1 லட்ச ரூபாய் காப்பீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த காப்பீடு தொகையை தற்போது அரசு 2 லட்ச ரூபாயாக உயர்த்தியுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இந்த உதவித்தொகையை உயர்த்தி வழங்கும் விழா சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் விபத்தில் சிக்கியவர்கள் எந்த நாடு எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு சார்பில் ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் நிலையில் தற்போது அந்த தொகை 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் அதிகமாக விபத்து நடக்கும் 500 இடங்களை கண்டறிந்து அதன் அருகில் உள்ள 248 அரசு மருத்துவமனைகள் மற்றும் 473 தனியார் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.