தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தொடர் கன மழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வாரம் சென்னையில் மழை காரணமாக பள்ளி மாணவர்களுக்கு விடப்பட்டிருந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக டிசம்பர் இரண்டாம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் அனைத்தும் செயல்படும் என இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் உத்தரவு ரத்து செய்யப்பட்டு சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி ஆசிரியர்களுக்கு நடைபெற உள்ள பயிற்சி வகுப்புகள் காரணமாக விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.