தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருவதால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அதே சமயம் தமிழகத்திற்கு மூன்று நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று இரவு 15 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, நெல்லையில் ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.