
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் அதே நேரத்தில் மழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. இதைத் தொடர்ந்து இன்று தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, தென்காசி, தர்மபுரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் தமிழ்நாட்டில் நாளை முதல் மார்ச் 25ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.