
தமிழகம் முழுவதும் இன்று வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 11ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஹோட்டல் பார்கள், டாஸ்மாக் கடைகள் போன்றவைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை. எனவே தடையை மீறி மதுபானம் இருப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இன்று ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் கடைகளை மூட வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது. மேலும் வள்ளலார் கள்ளுண்ணாமை மற்றும் மாமிசம் உண்ணாமையை வலியுறுத்தியவர். இதனால் இன்று இரு கடைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது நிலையில் தடையை மீறி கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.