தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று அவரின் உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட இருக்கிறது. இந்த நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார். இந்த விழாவிற்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கும் நிலையில் ‌ அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள திமுக அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.