தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு நாளை முதல் வருகிற 11-ம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.