தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் செப்டம்பர் 12ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு இன்று தமிழகத்தில் மட்டும் 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அதன்படி ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.