தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் செவ்வாய்க்கிழமை வரை சென்னை உட்பட தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதன் பிறகு இன்று கிளாம்பாக்கத்தில் இருந்து 130 சிறப்பு பேருந்துகளும் நாளை 250 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.

இதேபோன்று சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று 30 சிறப்பு பேருந்துகளும், நாளை மாதவரத்தில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக 40 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பயணிகள் முன்கூட்டியே www tnstc.in மற்றும் மொபைல் செயலி மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.