தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதன்படி மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களுக்கும் இன்று  முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு முழுமையாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது ராமநாதபுரத்தில் நடைபெற இருக்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியில் அக்டோபர் 30ஆம் தேதி ஏராளமானோர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கலந்து கொள்வார்கள்.

அதோடு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொள்வார்கள். இதன் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கண்ட 3 மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.‌ மேலும் 3 தினங்களிலும் கள்ள சந்தையில் மதுபானங்களை விற்பவர்கள் மற்றும் சட்ட விரோதமாக மதுபானங்களை விற்க முயற்சி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் எச்சரித்துள்ளனர்.