தமிழகத்தில் கடந்த டிச. 11ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை அரசு, அரசு நிதியுதவி பெறும்மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடந்து முடிந்தது. மழை, வெள்ள பாதிப்பு காரணமாக தென் மாவட்டங்களை தவிர்த்து, எஞ்சிய அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து, வரும் ஜன.2ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.