
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் பலத்த காற்றுடன் மழை பெய்யும். இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.