
தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.
மேலும் கோவை மாவட்டத்தில் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி , திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 400 வீரர்களை கொண்ட 12 பேரிடர் மீட்பு படை குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.