
தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும் திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
அந்த வகையில் இன்று 2 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி கடலூர் மாவட்டத்திலும், உத்தரகோசமங்கை கோயில் திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.