
தமிழக அரசு ஒலி மாசுவை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதோடு சில கட்டுப்பாடுகளும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் நியமிக்கப்பட்ட நிலையில் நியமிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ஒலி மாசு இருந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமைதி மண்டலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஹாரன் அடிக்கக்கூடாது. இதேபோன்று இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் சத்தத்தை ஏற்படுத்தும் பட்டாசுகள் மற்றும் கட்டுமான கருவிகளையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு ஒலி மாசுவை கட்டுப்படுத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆர்டிஓக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ஒலி மாசு இருப்பதாக புகார் வந்தால் கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.