
தமிழகத்தில் இரவு 10 மணி வரை 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது; சென்னை. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, தி.மலை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், குமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சில மாவட்டங்களில் கனமழையும் பெய்து வருகிறது.