
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பல மாவட்டங்களிலும் இடைவிடாது மழை பெய்த நிலையில் இன்று காலை முதல் ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருகிறது. அதேசமயம் தமிழகத்தில் இன்று இரண்டு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ஈரோடு மற்றும் நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை, செங்கல்ப ட்டு, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.