தமிழகத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதற்கு பிறகு மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகல விலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயரும். இந்த புதிய உயர்வு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு 50% அகலவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று சி ஐ டி யு கடிதம் எழுதியுள்ளது. போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு அகலவிலைப்படி நிலுவைத் தொகையையும் முழுமையாக வழங்க வேண்டும் எனவும் போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை முறைப்படுத்தி கடந்த 8 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள அகல விலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே விரைவில் இது குறித்து ஆலோசித்து அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.