தமிழகத்தில் சிப்காட் வளாகங்கள் இல்லாத மாவட்டங்களில் புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவுறுத்தியுள்ளார். சிப்காட் மேம்பாடு ஆய்வுக் கூட்டத்தில் இது தொடர்பாக பேசிய அவர், இந்திய அளவில் தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை நோக்கிய திட்டங்களை விரைந்து முடிக்க அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

மேலும், முதல்வரின் அறிவிப்புகள் மற்றும் சட்டமன்ற மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.