தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஒரு வருடங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் புதிதாக உதித்துள்ள விஜயின் தமிழக வெற்றிக்கழக கட்சியும் களமிறங்க உள்ளது. இதனால் தற்போது தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இப்படியான நிலையில் கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கு 27 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நேற்று ஆர் எஸ் புரம் தபால் நிலையம் அருகே நடந்தது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, கோவையில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை தமிழக முதல்வர் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் என்று தொடர்ந்து கூறி வருகின்றார்.

தமிழகத்தில் பேருந்து, பள்ளி மற்றும் கல்லூரிகள் என பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எங்கேயும் பாதுகாப்பு கிடையாது. காவல்துறையில் பணியாற்றக்கூடிய பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் தான் நிலவுகிறது. திமுக அரசு கடைசி ஓராண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தீவிரவாதிகள் எங்கிருந்தாலும் வீழ்த்தி கொண்டு வருவோம். பாஜக கட்சி ஒரு சமுதாயத்திற்கான கட்சி அல்ல, இந்திய கலாச்சாரத்திற்கு ஆதரவான கட்சியாகும். அனைவரும் வருகின்ற மே 21 ஆம் தேதி பயங்கரவாதத்திற்கு எதிரான சங்கல்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை பேசியுள்ளார்.