தலைநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பெருநகர சென்னை மாநகராட்சியில் வருகிற ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் சமர்ப்பிக்கப்படும் கட்டிட திட்ட அனுமதி விண்ணப்பங்களை onlineppa.tn.gov.in என்ற தமிழ்நாடு ஒற்றை சாளர போர்டல் இணையதளம் மூலம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியில் திட்ட அனுமதி விண்ணப்பங்கள் கட்டட திட்ட ஒப்புதல் நிகழ்நிலை அமைப்பின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திட்ட அனுமதி விண்ணப்பங்கள் நிகழ்நிலை முறையில் பெற்று செயலாக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்படும். பொதுமக்களுக்காக இந்த சேவையை மேம்படுத்துவதற்காக இந்த கட்டிட திட்ட ஒப்புதல் நிகழ்நிலை தமிழ்நாடு ஒற்றை சாளாரப் போர்டலுடன் ஒருங்கிணைக்கப்பட்டது. ஏப்ரல் 1-ஆம் தேதி வரை சென்னை மாநகராட்சியில் சமர்ப்பிக்கப்படும் கட்டிட திட்ட அனுமதி விண்ணப்பங்களை onlineppa.tn.gov.in என்ற தமிழ்நாடு ஒற்றை சாளர போர்டல் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த மாதம் 31-ஆம் தேதி மற்றும் அதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள முறையிலேயே ஒப்புதல் கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.