
தமிழகத்தில் அரசு பேருந்துகளை இயக்க ஒப்பந்த அடிப்படையில் 400 ஓட்டுநர்களை நியமிக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட வழித்தடங்களில் ஒப்பந்த ஓட்டுனர்களை பணியமற்ற போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாகவும் இந்த பணிகளுக்கு தகுதியும் அனுபவம் வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஓட்டுநர்களை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்ட நிலையில் சென்னையைச் சேர்ந்த 4 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளனர். ஒப்பந்த ஓட்டுநர்கள் 12 மாதங்கள் பணியில் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.