விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தன்னை ஒரு அரசியல்வாதி போன்று தான் மீண்டும் தமிழக ஆளுநர் ரவி அடையாளப்படுத்தி கொள்கிறார். அவர் ஆளுநர் என்ற பொறுப்பை மறந்து தொடர்ந்து பேசுவதும் செயல்படுவதும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர் தலித்துகளை வலதுசாரி பக்கம் கவர நினைக்கிறார்.

குறிப்பாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பக்கம் தலித்துகளை ஈர்ப்பதற்காக தான் அடிக்கடி இதைப்பற்றி ஆளுநர் பேசுகிறார். ஆளுநர் ரவி ஒரு தலித்தை முதலமைச்சர் ஆக வேண்டும் என கூறுவது அப்பாவி தலித்துகளை வளைத்து போடுவதற்கான முயற்சி தான். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலித்துகள் ஒருபோதும் கவர்னரின் சூழ்ச்சி பேச்சினை நம்பி ஏமாற மாட்டார்கள் என்று கூறினார்.