சென்னையில் நேற்று காலை தொடர்ந்து ஏழு இடங்களில் செயல்படும் சம்பவங்கள் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்  நேற்று தொடர் செயின் பறிப்பு சம்பவங்களின் மூளையாக செயல்பட்ட ஜாபர் குலாம் ஹுசைன், போலீஸ் என்கவுண்டரில் உயிரிழந்துள்ளர். அதாவது விமான நிலையத்தில் நேற்று காலை கைது செய்யப்பட்டவரை, விசாரணைக்குப் பிறகு தரமணி ரயில் நிலையம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த நகைகளை மீட்க போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது, போலீசாரை தாக்கிவிட்டு அவர் தப்ப முயன்ற போது, காவல் ஆய்வாளர் முகமது புகாரி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார். இதில் அவர் உயிரிழந்தார். மேலும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜாபர் மீது நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.